இங்கிலீஷ்காரன்…

50% லொள்ளு…50% ஜொள்ளு…

அறிவிப்பு…

with 5 comments

என் இனிய வலை நண்பர்களே… தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்னால் வோர்ட் பிரஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட இயலாத சூழ்நிலை. ஆதலால் அனைவரும் http://englishkaran.blogspot.com என்ற சுட்டியை சொடுக்கி தொடர்ந்து கும்மி அடித்து தங்கள் ஆதரவை தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements

Written by Sriram

பிப்ரவரி 10, 2009 at 3:13 பிப

செய்தி... இல் பதிவிடப்பட்டது

வெண்ணை வெட்டி…

with 11 comments

பதிவு எழுதுவதை விட பின்னூட்டம் போடுவதே சுவாரசியாமாக உள்ளதை நான் எந்த பதிவும் இடாத இந்த இரண்டு வாரங்களில் அறிந்து கொண்டேன். நம்ம அண்ணன் நைஜீரியா ராகவன் இதை ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே அனுபவித்து வந்திருக்கிறார். இருப்பினும் அண்ணன் அணிமா ராகவன் அண்ணனயும் தமிழ் கூறும் ப்ளாக் உலகத்துக்கு அழைத்து வந்து விட்டார். ஆனாலும் பதிவிடாமல் அடுத்தவர் பதிந்ததை படித்து பின்னூட்டம் இடுவது மிகவும் சுகமான அனுபவமாகவே இருந்தது.

நம்ம அலுவலகத்தில் வேறு வேளாவேளை வேலை வேலை என்று பிழிந்து எடுப்பதால் சென்ற நாட்களில்  பதிவு போட இயலவில்லை (யாருப்பா அங்க விசில் அடிச்சு கூவறது) என்பதை கூறி கொள்கிறேன்.மீண்டும் நேரம் கிடைக்கும் போது இந்த மாதிரி வந்து ஏதாவதை பினாத்தி விட்டு செல்வேன் என்பது மட்டும் உறுதி (அட இப்ப யாருப்பா அங்க என்னை முனகிக் கொண்டே திட்டுறது).

நம்ம நட்பு புவனேஷ் வேற “பதிவு போடலியோ பதிவு” என்று கேட்க தொடங்கியாச்சு. பொருளாதார சிக்கலில் மாடிக் கொண்டு முழிக்கும் அமெரிக்காவை போல நான் முழித்தது என்னவோ உண்மை தான். சரி இப்ப மேட்டருக்கு வருவோம். என் மூளையை கஞ்சாவை விட இன்னும் அழுத்தம் கொடுத்து கசக்கியதில் பிறந்த கவிதை (?!) இது. சோக்கா கீதான்னு சொல்லுங்க

முன்பொரு தருணம்
கிருஷ்ண ஜெயந்தி அன்று
வரைந்த பாதச் சுவடுகள்
எதற்கு என்றேன்
அம்மாவிடம்…

“வெண்ணை தின்ன
கண்ணன் வருவான் டா
வெண்ணை” என்றாள்.
என்னை ‘வெண்ணை’ என்று
சொன்னதால் என்னவோ
அம்மாவிடம் இதெல்லாம்
புருடா என்றேன்.

கண்ணன் தான்
சரியான
வெண்ணை வெட்டி
என்றேன்.

பின்னொரு நாளில்
சாகும் தருவாயில்
என் தாத்தா…
பக்கத்தில் நான்…
தாத்தாவின்
உயிர் மாய்ந்தது…
வந்தே விட்டான்
எமன்.

இப்போது எனக்கு
கிருஷ்ண ஜெயந்தி
அன்று கண்ணனும்
வந்திருப்பானோ
என்று தோன்றியது.

Written by Sriram

பிப்ரவரி 4, 2009 at 3:43 பிப

கவிதை இல் பதிவிடப்பட்டது

அனுதினமும் அணு ஒப்பந்தம் (பகுதி 4)

leave a comment »

கலாமின் இந்த டைம் டேபிளின் படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கான  பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன.

கிட்டத் தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள். மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு. மே 10 ஆம்  தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம்.

வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் நேரத்தில் சோதனை நடத்தலாம் என சுதந்திரம் தர மே 11 ஆம் தேதி பிற்பகலில் ஜைசால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து மூன்று முறை குலுங்கியது.

உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெகார்ட் செய்ய உலக நாடுகள் முழுவதுக்கும் தெர்மோ நியுக்ளியர் ஷாக்.! இந்திய சோதனையிட்டது அணு இணைப்பு மூலம் வெடிக்கும் ‘தெர்மோ-நியுக்கிளியர்’ பாம்.

இந்திய மீது போடப் பட்ட முப்பது ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விட வில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.

அடுத்த முப்பது நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.”இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி ஏற்காவிட்டாலும் சரி”

இந்த சோதனை மூலம் இந்திய மூன்று முக்கிய தகவல்களை அணு உலகுக்கு சொன்னது.

1.யுரேனியத்திலிருந்து ப்ளுடோனியத்தை பிரிப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம்.

2.இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ரஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான்.

3.ஹெவி வாட்டில் இருந்து டிரிடியம் பிரிப்பதும் எங்களுக்கு தெரியும்.

இந்த குண்டு அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது. தடைகள் போட்டு என்ன சாதித்தோம். இந்த தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது? என சிந்தித்தன நாடுகள். குறிப்பாக அமெரிக்கா!

இந்த நிலையில் தான் செப்டம்பர் 11 தாக்குதல்.உலக நாடுகள் குறித்து அமெரிக்கா ஒட்டு மொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்கா சிந்தித்த தினம்.

அது வரையில் தீவிர வாதம் என்றால் தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தன்  தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கை விடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது.

தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப் பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக்குரல் அது வரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை.

இந்நிலையில் நியூயார்க் தாக்குதல் மூலம், எதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக இந்தியாவைப் பார்த்து அமெரிக்கா.இந்தியாவை நாம் ஏன் இத்தனை ஆண்டுகள் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது இந்த தாக்குதல் தான்.

இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், என நெருங்கி வந்தது அமெரிக்கா.இந்தியாவுக்கு எப்-16 ரக விமானகளை தரவும் முன்வந்தது.இந்தியா-அமெரிக்கா உறவில் இப்படியொரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்க் – அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய மாரத்தான் பேச்சு வார்த்தைகள் தான்.

இருவரும் மாறி மாறி இந்தியா, அமெரிக்கா பயணித்து பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தினர். இரு நாடுகளும் தங்கள் மீது கொண்டுள்ள சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான்.

(தொடரும்…)

Written by Sriram

பிப்ரவரி 2, 2009 at 2:11 பிப

அரசியல் இல் பதிவிடப்பட்டது

SLUM DOG MILLIONARE…

with 7 comments

slumdog-millionaire-fl-01

இது என் முதல் திரைப் பட விமர்சனம். திரைப் படங்களைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது என்றாலும் இந்த படத்தை பற்றி நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். SLUM DOG MILLIONARE படத்தை நேற்று தான் பார்த்தேன்.வழக்கமாக ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களை பெரும்பாலும் நான் பார்ப்பதில்லை. ஆனால் எதோ ஒன்று இந்த படத்தை என்னை பார்க்க வைத்தது.

சும்மா சொல்லக் கூடாது. இந்த மாதிரி படங்களை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்றே சொல்லவேண்டும். குருவியும்,ஆழ்வாரும்,ஏகனும் இன்ன பிற படங்களையும் பார்த்து புண் பட்டிருந்த மனதுக்கு புத்துணர்ச்சியையும், தெம்பையும் எனக்கு மீட்டுக் கொடுத்தது இந்த படம். திரைக் கதை என்றால் இப்படித் தான் அமைக்க வேண்டும். காட்சிகளை சரமாக கோர்த்த விதமும், அதனை படமாகிய விதமும் அருமை.படத்தின் இயக்குனர் Danny Boyle அவர்களுக்கு ஒரு பெரிய ஓ போடலாம்.

முதல் காட்சியில் போலீசிடம் அடி வாங்கும் நாயகன் தலையை உதறுவதும் அப்படியே காட்சி பிரீஸ் செய்து க்ரோர்பதி நிகழ்ச்சிக்கு இட்டுச் செல்வதும் celluloid கவிதை.

மும்பை தாரவி பகுதியில் உள்ள சேரியில் வாழும் சிறுவனும் (நாயகன்) அவன் சகோதரனும் பிரமிக்க வைக்கின்றனர் தங்களது நடிப்பில். ரயிலில் திருடி திருடி பொருட்களை விற்கும் காட்சியில் ஆகட்டும், ஆக்ராவில் காலணிகளை திருடி விற்கும் காட்சிகளில் ஆகட்டும் பின்னிப் பிடல் எடுக்கின்றனர் சிறுவர்கள்.

படத்தின் கதை சுருக்கம் இது தான். மும்பை சேரி பகுதியில் பிறந்து, சாதி கலவரத்தில் தாயை இழந்து ஊரை விட்டு ஓடும் இரு சகோதரர்கள் காலத்தின் பிடியில் ஒருவன் மும்பை தாதா கும்பலில் சேர்ந்து கொள்வதும் , ஒரு கால் சென்டெரில் டீ விற்கும் வாலிபனான இளையவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டு கோடிகளை
வெல்வதே கதை. இடையில் சிறு வயதில் தன்னை விட்டு பிரிந்த காதலியை தேடி எப்படி கரம் பிடிக்கிறான்  என்பதே படத்தின் மையக் கரு.

வட இந்தியாவின் வாழ்கை முறை, மனிதர்களின் நிலை என படத்தில் நம் நாட்டை  பிரதிபலித்திருக்கும்  விதம் மறுக்க முடியாத உண்மை. ரஹ்மானின் பின்னணி இசை அற்புதம் . மொத்தத்தில் எவனோ ஒருவனுக்குப் பிறகு நான் ரசித்து விரும்பிப் பார்த்து இந்த படத்தை தான்.

அனில் கபூரின் நடிப்பு யதார்த்தம். வார்த்தைக்கு வார்த்தை ‘சாய் வாலா ‘ என்று அழைப்பதிலும் சந்தேகப் பட்டு நாயகனை போலீசில் பிடித்துக் கொடுப்பதிலும், இறுதியில் தவறான விடையை வேண்டும் என்றே கண்ணாடியில் எழுதி விட்டு செல்வதிலும் கதாபாத்திரத்திற்கு உயிர் சேர்க்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் இர்பான் கானுக்கு அதிக வேலை இல்லை. இருப்பினும் நிறைவாக செய்திருக்கிறார்.நாயகியாக வரும் Freida Pinto அழகுடன் சேர்ந்து  நடிக்கவும் செய்திருக்கிறார். நாயகனாக தேவ் படேலும் அவரது அண்ணன் வேடத்தில் மதூர் மிட்டலும் அருமையான நடிப்பில் மிரள வைக்கின்றனர்.

மொத்தத்தில் இருக்கையை விட்டு எழச் செய்யாது கதையை நகர்த்தி, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நம்மிடம் உருவாக்கி நம்மை படத்தோடு ஒன்றிட செய்திருப்பது இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

Written by Sriram

ஜனவரி 16, 2009 at 2:42 பிப

சினிமா இல் பதிவிடப்பட்டது

பொங்கல் வாழ்த்துக்கள்…

with 10 comments

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்…

2199849692_9d427bbc6b

நான் என்னுடைய பொங்கல் அன்னைக்கு (அட அதாங்க மாட்டு பொங்கல்…வெளக்கெண்ணை மாறி வெளக்கம் கேட்டு கிட்டு…) வில்லு படத்துக்கு போகலாமுன்னு இருக்கேன்…(அட யாருப்பா அங்க, “நீ ஏன்டா தற்கொலை பண்ணிக்கிற?” என்று கேக்குறது.  நீங்களும் மஜாவா பொங்கல கலாயிங்க… படம் பார்த்துட்டு திரும்பி வந்தேன் என்றால் மீண்டும் சிந்திப்போம். விஜய் ரசிகர்கள் இதை மிகவும் சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டாம் … ஏனெனில் இந்த பொங்கலுக்கு அஜித் படம் எதுவும் வரல…இப்போதைக்கு அப்பீட்டு… அப்புறமா ரிப்பீட்டு…pongal2

Written by Sriram

ஜனவரி 12, 2009 at 2:10 பிப

வாழ்த்து இல் பதிவிடப்பட்டது

பட்டாம்பூச்சி விருது.

with 5 comments

பட்டாம்பூச்சி விருது.

bf

முதலில் “Coolest Blog I ever Know”  அவார்ட் கொடுத்த குந்தவை  அக்கா அவர்களுக்கு எனது வணக்கம் கலந்த நன்றிகள் .  (விருதுக்கு ஆசைப் படும் எருது (அடடே கவிதை கவிதை!!!) நானல்ல என்றாலும் கொடுப்பவர் மனது சங்கட படாமல் இருக்க இதை ஏற்று கொள்ள வேண்டி இருக்கிறது. கொடுத்த வாக்கையும் விருதையும் திரும்பி வாங்கும் வழக்கம் நம்ம குந்தவை அக்காவுக்கு இல்லை என்பதால் நான் தைரியமாக இந்த விருதினை ஏற்று கொள்கிறேன். ஏதோ மொக்கை தனமா நாலஞ்சு பதிவு போட்டு ஓட்டிகிட்டு இருந்த இந்த சின்ன பையனுக்கும் விருது கொடுத்ததுக்கு நன்றிகள். இனிமேலாவது எனக்கு பொறுப்புன்னு ஏதாவது வந்துச்சுன்னா உருப்படியா ஏதாச்சும் எழுத முயற்சி பண்ணுறேன்.

இந்த அவார்டை நான் மூன்று பேருக்கு கொடுக்க வேண்டும் என்பது இந்த தொடரை  ஆரம்பித்து வைத்த பேர் தெரியா பதிவரின் விதி. இது எப்படி கீது னா…  திருவள்ளுவர் 1330 குறள் எழுதி வெச்சிட்டு பூட்டாரு… ஆனா அவரு எழுதிய குறளை வருஷா வருஷம் படிச்சு பரிட்சையில எழுதறதுக்குள்ள  டாவு தீர்ந்துடும். அந்த மாறி  இந்த தொடரை  ஆரம்பித்து வைத்த பேர் தெரியா பதிவர் மூணு பேரையாவது மாடி விடனும் சொல்லிட்டு பூட்டாரு… இப்பவும் மாட்டிகினு முழிக்கிறது யாரு? நான் தான்…

( விருது வழங்கும் அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் எல்லாம் இல்லீங்க.. ஏதோ செய்ய சொன்னாங்களேன்னு பண்றேன். அதுக்காக கடமைக்கு பண்றான்னு நெனைச்சுக்காதீங்க…)எனவே நான் விருது வழங்கும் மூன்று நபர்கள்…

1. கல்யாண கமலா அம்மா :  இவர்கள் எழுதும் பதிவுகளை நான் அண்மையில் ரசித்து படித்து வருகிறேன். ஏனெனில் இவர்களின் பதிவு முழுவதும்,  இன்றைய இளைய சமூகத்தின் மேல் உள்ள அக்கறையை  மனம் கூசாமல் எடுத்து கூறுவபையாக  இருக்கும்.

2. அண்ணன் மணி : இவரைப் பற்றி அதிக விளம்பரம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் இவரது பதிவுகளைப் பற்றி கூற வேண்டுமாயின், இவர் பெரும்பாலும் நமது பழைய பழக்க வழக்கங்கள், நமது குழந்தை பருவத்தில் ஆடிய விளையாட்டுக்கள் போன்றவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் பதிவுகளை வெளியிடுபவர்.

3. புகழினி :  இவரது பதிவுகள் ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்து ஒலிக்கும் ஒரு பெண் சிங்கத்தின் கர்ஜனை என்றே எனக்கு தோன்றும். அனைத்து ஆண்களும் இவர் சொல்வது போல இல்லாவிடினும் இன்னும் இவர் கூறும் சில சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பது திண்ணம். எனவே இவருக்கும் ஒரு சபாஷ்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள். அப்புறம் என்ன? அரசியல்வாதி  கஜானாக்குள்ள மாட்டிகிட்டு இருக்கும் கருப்பு பணத்தை போல இந்த விருதினை ஆக்காமல் நீங்களும் மூணு பேருக்கு பகிர்ந்து கொடுங்க…

சரி, இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் <—–

குந்தவை <—–

மோகனின் எண்ணங்கள் <—-

அணிமா <—-

ராகவன் <—-

ரம்யா <—-

பூர்ணிமா <—-

விஜய் <—–

திவ்ய பிரியா <——

G3(பிரவாகம் )—>

கார்த்தி/mgnithi—>

Gils/Shanki—->

பிரியா –>

Kartz—->

Tusharmargal—>

Akansha—->

Infinity—->

Simple Elegant Girl —- >

Chronic Chick Talk —–>

Empty Streets—–>

The Blog Reviewer—>

biotecK—->

KisAhberuang—->

blogscope >>>>>>

Written by Sriram

ஜனவரி 6, 2009 at 7:29 பிப

தொடர் பதிவு, வாழ்த்து இல் பதிவிடப்பட்டது

அனுதினமும் அணு ஒப்பந்தம் (பகுதி 3)…

leave a comment »

நிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா?
இல்லை…
பொறுத்தது போதும் என மே மாதம் 1998 இல்  வாஜ்பாய் கண்ணசைக்க , டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான ஒரு டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது.

இம்முறை அமெரிக்கா உளவு செயற்கைக் கோல்களையே ஏமாற்றி காட்டினர் நம்ம கலாம்.

அப்துல் கலாமுக்குள் இருந்த அணு விஞ்ஞானம் குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்ச் போட்டு ராணுவ இன்ஜினியர்களிடம்  கொடுக்க செய்தது. கலாமுக்குள் இருந்த ராக்கெட் – சாட்டிலைட் விஞ்ஞானம்  அமெரிக்கா செயற்கை கோள்களின்  சுழற்சியை கணித்து கொண்டிருந்தது.

போக்ரான்…

அணு விஞ்ஞானி கலாம் தனது குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவர் டாக்டர்.ஆர். சிதம்பரம்.

கலோனல் ப்ரித்விராஜ் என்று சிதம்பரம் அழைக்க கலாம் முதலில் திரும்பி பார்க்க வில்லை. யாரையோ கூப்பிடுகிறார்   என நினைத்து தனது ஸ்கெட்ச் இல் ஆழ்ந்து இருந்தார்.

மீண்டும் கலோனல் ப்ரித்விராஜ் என்று சிதம்பரம் அழைக்க , கலாம் சட்டென திரும்பி ” அட ஆமா அது நான் தான் இல்ல , சொல்லுங்க கலோனல் நடராஜ் ” என்றார் சிதம்பரத்திடம். அணுகுண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுக்தி தொடங்கியது இந்த பெயர் மாற்றத்தில் இருந்து தான்.

இந்த முழு சோதனையையும்  மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம் – சிதம்பரம் – இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர். கே. சந்தானம் – பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அணில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர் சூட்டிக் கொண்டனர்.

அந்த வகையில் ப்ரித்வி ஏவுகனை பெயரை சேர்த்து கலாமுக்கு ப்ரித்வி ராஜ் என்று பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நடராஜ் என்று பெயரிட்டார் கலாம்.
அதே போல் சந்தானம் கலோனல் சீனிவாசன் ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக மாமாஜி என்று பெயர் சூட்டினர்.

பாலைவன பகுதியில் தாங்கள் நடத்த போகும் அணுகுண்டு சோதனைக்கு சக்தி என்று பெயர் சூட்டினர்.இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் நாடுகளின் செயற்கை கோள்கள் மற்றும் உளவாளிகள், தொலைப் பேசிகள் மூலம்  ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த கலோனல்கள் பொக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துவதாக தோன்றி இருக்க வேண்டும்.

கலாம் – சிதம்பரம் – டாக்டர். கே. சந்தானம் –  ககோட்கர் டீம் போக்ரான் பக்கம் பொய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியானால் சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசியத் திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம்.

மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்தே அப்பகுதியில் அவர்கள் நடமாடினர்.

ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த தீமை அழைத்து குண்டை போட சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான்.

சட்டென களத்தில்  குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினை உருவாக்கினார்கள்.ராணுவத்தின் Corps of Engineers பிரிவில்  இருந்து  1,000 வீரர்களை தேர்ந்து எடுத்தனர்.விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடை தான்.

அடுத்ததாக கலாம் அமெரிக்கா உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை வைத்து ஒரு டைம்- டேபிள் போட்டார்.இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம். இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலைக் காட்டக் கூடாது. இந்த நேரத்தில் தான் அணு கருவிகள் தாங்கிய ராணுவ வாகனங்கள் புறப்பட வேண்டும்.இந்த நிமிடத்தில் தான் அது பொக்ரானில் நுழைய வேண்டும் .அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும் , இதனால் ஹெவி மெசின் கன்கள், ராக்கெட் லாஞ்சர்கள், மார்ட்டர்கள் ஆகியவை வெடித்து ஒரு பக்கம் புழுதியை கிளப்பட்டும் என பல்வேறு ராணுவ உளவு யுக்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.

(தொடரும்…)

Written by Sriram

ஜனவரி 6, 2009 at 6:47 பிப

அரசியல், செய்தி..., பொது இல் பதிவிடப்பட்டது