வாழ்க ஜனநாயகம்…
பதிந்தவர் Sriram மேல் டிசம்பர் 3, 2008
காலையில் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது…
அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நோக்கில் இந்த பதிவு…
அதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு நம் இந்திய அரசு மூன்று கோடி பரிசு தொகை அளித்திருந்தது பற்றியும் அண்மையில் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேச பாதுகாப்புக்காக உயிர் நீத்த காவல் அதிகாரிகளுக்கு ஐந்து லட்சம் உதவி தொகை வழங்கியதையும் ஒப்பிட்டு நம் இந்திய ஜனநாயகத்தை வாழ்த்தி இருந்தது.
முன்னவர் விளையாட்டில் துப்பாக்கியில் சுட்டு வெற்றி பெற்றதற்கு மூன்று கோடி…
பின்னவர்கள் தேச பாதுகாப்புக்காக துப்பகியில் சுட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு ஐந்து லட்சம்…
எண்ணி பாருங்கள் நம் ஜனநாயக நாட்டின் லட்சணத்தை…
காந்தியடிகள் அன்று வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற நாம் பட்ட துயரத்தை
“நாங்கள் எங்கள் பாரதச் செடியை
கண்ணீர் விட்டு வளர்க்க வில்லை-மாறாக
செந்நீர் விட்டு வளர்த்தோம் “
என்றார். நாம் சுதந்திரம் பெற்று 61 வருடங்கள் ஆகியும் கூட இன்னும் செந்நீரும் கண்ணீரும் சிந்தி கொண்டு தான் இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.அதற்கு அண்மையில் நடந்த மும்பை கலவரம் ஒரு உதாரணம்.இது போல எத்தனையோ அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. அப்போதும், இப்போதும், எப்போதும் நாம் என்ன செய்கிறோம் ? அந்த சம்பவங்கள் நடந்த 2 வாரங்கள் அதை பற்றி கார சாரமாக விவாதித்துவிட்டு அதில் பாதிக்கப் பட்டவர்களின் நீதி என்ன ஆனது இறுதியில் என்பதை மறந்து விடுகிறோம். இனியாவது நாம் நம்மை மாற்றிக் கொள்வோமா?
காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
பி.கு : இதை பகிர்ந்து கொள்ள தூண்டியது புவநேஷின் மும்பை கலவரம் என்ற தலைப்பில் இருந்த பதிவு தான்…
அவருக்கு எனது நன்றிகள்…








Bhuvanesh சொன்னார்
ஸ்ரீராம் நல்ல பதிவு!! உன் மறுமொழியை பற்றி என் நண்பர் ஒருவரிடம் பேசும்போது, அவர் சொன்ன விஷயங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அவர் சொன்னது “அந்த மெயில் எனக்கும் வந்துச்சு. அது பிந்த்ராவை அவமான படுத்துற மாதிரி இருக்கு. அவர் செஞ்சதும் சாதனை தான். ராணுவ வீரர்கள் செய்வதும் சாதனை தான். இதற்க்கு அஞ்சு லட்சம் பத்தாது. அதற்கு அவர் படம் வேண்டுமா?. வேறு மாதிரி சொல்லிருக்கலாம். உதாரணமா ஒரு ஐ.டி உழியன் சாதரணமா சம்பாதிக்கரத இவங்க உசுர கொடுத்து சம்பாதிக்கணுமா? அப்படி எதாவது கேட்டுருக்கலாம்.”
நான் விளையாட்டை விளையாடாய் பார்ப்பவன். இந்திய அரசு அவருக்கு ஒரு உதவியும் செய்ய வில்லை. அதனால் அந்த வெற்றியை உரிமைகொண்டாட எந்த தகுதியும் இல்லை என்று நினைப்பவன். மூணு கோடி கொஞ்சம் ஓவர் தான்.
என்னை பொறுத்தவரை இறந்த வீரர்களுக்கு இதைவிட ஒரு பெரிய தொகையும், அவர்கள் குடும்பத்துக்கு நிரந்தர வருமானம் வரும்படி ஒரு எதாவது (யாருக்கேனும் அரசாங்க வேலை, நிரந்தர வைப்பு தொகை போல எதாவது) செய்யாலாம்!!
பின் குறிப்பு: என் பெயரை பார்த்ததும் கொஞ்சாம் ஆடி போய்டேன்!! உங்களை அந்த பதிவு தூண்டியது மாகிழ்ச்சி!! ஆனால் நன்றி நீங்கள் சொல்லவேண்டியது இல்லை.. உங்கள் ரசிப்பிற்கு நான் தான் சொல்ல வேண்டும் நன்றி!! நன்றி!!
Sriram சொன்னார்
தங்கள் கருத்துக்கு நன்றி புவனேஷ் …நீங்கள் கூறுவதை நான் ஒத்துக் கொள்கிறேன்.நமது நாட்டில் விளையாட்டை சீரியசாக பார்ப்பதும்,சீரியசானவற்றை விளையாட்டாய் எடுத்து கொள்ளும் மனோபாவம் இன்னும் மாறவில்லை என்பது திண்ணம்.
தனிமனித சாதனைக்கு மூன்று கோடி எனில் நம் நூறு கோடி இந்திய மக்களின் மானத்தை காத்தது கூட ஒரு சாதனை தான். இது ஒரு கூட்டு முயற்சியாகவே இருந்தாலும் ஒவ்வொரு தனி ராணுவ வீரரின் முயற்சியும் இதில் இருந்திருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சந்தீப் என்ற வீரர் இந்த கலவரத்தில் இறந்தார் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். “அவர் மட்டும் இதில் இறந்திருக்காவிட்டால் ஒரு நாய் கூட அவரது வீட்டை திரும்பிப் பார்த்திருக்காது” என்று கேரளா முதல்வர் திரு.அச்சுதானந்தன் நேற்று கூறியிருப்பது பலத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
Bhuvanesh சொன்னார்
ஸ்ரீராம், அவர் கலவரத்தில் இறக்கவில்லை. அவர் ஒரு கமாண்டோ. தீவிரவாத தாக்குதலில் பலி ஆனார்!! திரு.அச்சுதானந்தன் நேற்று மன்னிப்பும் கேட்டுள்ளார்!! பொறுபற்ற மனிதர், எப்படி நல்ல முதலமைச்சராக இருப்பார்?
Mohan சொன்னார்
ஸ்ரீராம், புவனேஷ் சொல்லி இருப்பது போல, அவர் ஒரு கமாண்டோ.
அச்சுதானந்தன் அப்படி அருவருப்பாகச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்து விட்டு, நேற்று மன்னிப்பு கேட்டு விட்டார்.
Sriram சொன்னார்
மன்னிப்பு …
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை…
Sriram சொன்னார்
வாங்க அண்ணாச்சி…
தங்கள் கருத்துக்கு நன்றி…
Sriram சொன்னார்
எங்கள் அலுவலகத்தில் கூட இச்சம்பவத்தில் உயிர் இழந்த காவல் துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களின் குடும்பத்திற்கு பொருளுதவி செய்ய ஒரு தன்னார்வ அமைப்பை உருவாக்கியுள்ளார்கள்..
நானும் அதில் ஒரு உறுப்பினர் என்பதில் எனக்கு ஒரு மன அமைதி …
Bhuvanesh சொன்னார்
வாழ்த்துக்கள் ஸ்ரீராம்!! இது நம் கடமை!!
கூடிய சீக்கிரம் அந்த தன்னார்வ அமைப்பின் செய்கையையும், அதில் உங்கள் அனுபவத்தையும் பற்றி சொல்லுங்கள்!!
surya சொன்னார்
NSG: தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்துவது தான் இந்தப் படை உருவாக்கப்பட்டதன் உண்மைக் காரணம்.
நாட்டில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக நாடு தினமும் பல நூறு கோடிகளை செலவழித்துக் கொண்டிருக்கிறது.
இதில் பெரும்பாலான அரசியல்வாதிகள் வெறும் பந்தாவுக்காகவே தங்களைச் சுற்றி என்எஸ்ஜி கமாண்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெட்டி பந்தா அரசியல்வாதிகளில் முக்கியமானவர்
இதைப் பார்த்து மக்கள் வாயைப் பிளக்க வேண்டும்.
இவ்வளவு பெரிய தலைவரா என்று மக்கள் நினைக்க வேண்டும்.இவரது வாகனம் வருவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பே சாலைகள் எல்லாம் சீல் செய்யப்பட்டுவிடும்.
ஆட்சியை விட்டு போன பின்னர் தான் இவரது கார் வரிசை கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் இவருக்கு இன்னும் இசட் பிளஸ் என்எஸ்ஜி பாதுகாப்பு உள்ளது.
ஜெயலலிதாவைவிட ஒரு படி மேலே போய்விட்டவர் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி. இவருக்கு அரசியல் எதிரிகள் தவிர வேறு எந்த ஆபத்தும் இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. இந்த அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள 4 ஜீப் போலீசாரே போதும். ஆனால், பந்தாவுக்கு அது போதாதே.
இதனால் மாயாவதி தனக்கு என்எஸ்ஜி கமாண்டோ பாதுகாப்பை வலுக்கட்டாயமாகக் கேட்டு வாங்கிக் கொண்டுவிட்டார். இவரது 24 மணி நேர பாதுகாப்புக்கு 24 கமாண்டோக்கள் 3 ஷிப்ட்களில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தவிர 350 ஆயுதம் தாங்கிய போலீசாரும் 24 மணி நேரம் இவரது பாதுகாப்புக்காக டெடிகேட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களாவது பரவாயில்லை. அமர் சி்ங் என்று ஒரு அரசியல்-கார்பரேட் புரோக்கர் இருக்கிறார். இப்போது, மத்திய அரசு ஆட்சியில் நீடிக்க இவரும் முலாயம் சிங்கின் ஆதரவுமே காரணம். மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி எம்பிக்களின் ஆதரவை அறிவித்த மறு நிமிடமே தனக்கும் என்எஸ்ஜி கமாண்டோ பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார். இவருக்கும் 24 பேர் .. 8 மணி நேர ஷிப்டில் பாதுகாப்பு தந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் தேவெ கெளடாக்கள், சுப்பிரமணியம் சுவாமிகள் போன்ற அரசியல் ஜோக்கர்களும் அடக்கம்.
இவர்கள் எல்லாம் இசட் கேட்டகிரி என்ற பட்டியலின் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ளனர்.இப்படியாக 250 பேர் விவிஐபிக்கள் என்ற பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ளனர்.
இதற்காக அரசு செலவிடம் பணம் ரூ. 158 கோடி.
தீவிரவாதிகளுக்கே தெரியாத ஆட்கள்….:
இந்தப் பட்டியலில் உள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சரத் யாதவ், முரளி மனோகர் ஜோஷி ஆகிய பெயர்களையாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், சஜ்ஜன் குமார், ஆர்எல் பாட்டியா, பிஎல் ஜோஷி, பிரிஜ்பூஷன் சரன், பிரமோத் திவாரி… இந்தப் பெயர்கள் நமக்கு மட்டுமல்ல தீவிரவாதிகளுக்கே தெரியாத ஆட்கள்.
அதே போல மத்திய அமைச்சர் என்ற ஒரே காரணத்துக்காக கமாண்டோ பாதுக்காப்பில் உள்ளவர் இ.அகமது. இவரை கேரளாவைத் தாண்டினால் யாருக்கும் தெரியாது.
இன்னொரு கொடுமை.. என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ள சஜ்ஜன் குமார் மீது ஒரு கொலை கேசும் உள்ளது.
இதைத் தவிர பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 14 பேர் இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி உச்சபட்ச பாதுகாப்பு அளி்த்து வருகிறது.
இதற்கு செலவாகும் தொகை ரூ. 180 கோடி.
Sriram சொன்னார்
வாங்க சூர்யா,
தங்கள் நீண்ட பின்னூட்டம் சற்று சிந்திக்க கூடியதாக உள்ளது.
அதுவும் ரமணா விஜயகாந்த் போல புள்ளி விவரங்களை கூறி அசத்தி விட்டீர்கள்.
அரசியல் தலைவர்கள் (?!) பாதுகாப்புக்கு இவ்வளவு பணம் புரள்கிறது என்று நினைத்தால் தலை சுற்றுகிறது.
Sriram சொன்னார்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி புவனேஷ்…
கூடிய விரைவில் இதை சார்ந்த ஒரு பதிவினை வெளியிடுகிறேன்.